Categories
வேலைவாய்ப்பு

10th, 12th படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.11, 600 சம்பளத்தில்….. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை….!!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து சென்னை அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

உதவி மின் பணியாளர் – 1

அலுவலக உதவியாளர் – 1

கடைநிலை ஊழியர் – 4

திருவலகு – 1

இரவு காவலர் – 1

உதவி கைங்கர்யம் – 1

சன்னதி தீவட்டி – 2

உதவி பரிச்சாரகர் – 1

கால்நடை பராமரிப்பு – 1

ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

01.04.2022 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் முதல் ITI படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

குறைந்த பட்சம் 11600/- முதல் அதிகபட்சமாக 52400/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு / Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்,

திருவல்லிக்கேணி,

சென்னை.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.05.2022

IMPORTANT LINKS

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyT9RGFAZoQj47kvtgDNoqXfGBeBnVkdk4JtDuBOlltoLDJz2uAu3ukB2MDP335K5nKp4fvcY5JEbJ5XHFqWb_1eK-yTasDfdvfNeyisbWa4z6f29ARfKTN2EmPkRYBj4GIFzn-yk3dodtM06a38k-j-IPGeV22JZcD_O_-aXLxXvYPmOJ1A2nG99ZLg/s1600/WhatsApp%20Image%202022-04-18%20at%204.22.06%20PM.jpeg

https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5&action=contact_us

Categories

Tech |