Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி …..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 100% மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 70 பேர் மாணவிகள் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர் மாணவர்கள் ஆவர்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால் வரும் 17ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.In என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |