Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 109 குழந்தைகள் பலி…. தொட்டில்களுடன் நடந்த அஞ்சலி…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 24-ஆம் நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் லிவில் நகரத்தில் இருக்கும் கவுன்சில் அலுவலகத்தின்  வெளியில் குழந்தைகளுக்கான தொட்டில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது வரை ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 109 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது. எனவே, போரில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த 109 தொட்டில் வண்டிகள் காலியாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

Categories

Tech |