Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்த காவல்துறை…. ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 104 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த முழு ஊரடங்கினால் உள் மாவட்டத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பேருந்து நிலையங்கள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக 100 இருசக்கர வாகனங்களும் 4 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |