Categories
மாநில செய்திகள்

1,021 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? MRB வெளியிட்ட தகவல்…!!!!

1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் 1021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி நேற்று வெளியிட்டது. இதில் அனைத்து சமூக பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாற்றுத்திறனாளிகளுக்கு 500, மற்றவர்களுக்கு ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு, ஊதியம் , ஆன்லைன் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்தும் விவரங்களையும் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். சம்பளம்: ரூ. 56,100-ரூ.1,77,500. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்.25. ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in கிளிக் செய்க என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |