செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திருக்குறள் ஏற்கனவே ஆங்கிலத்தில் 18 உரைகளுடன் வெளிவந்துள்ளது.
21 மொழிகளில் 5 மொழிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது மேலும் இந்திய மற்றும் வெளிநாடு என்று 22 மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 88 மொழிகளில் மொழி பெயர்க்க தகுதியானவர்களை தேடும் விதமாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் பேசியதாவது, உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் பழமை இலக்கியங்களான சங்க இலக்கியங்களை உலக மக்களிடம் சேர்ப்பதற்காக மொழிபெயர்ப்பு பணிகள் நடக்கிறது. மேலும் திருக்குறளை 102 மொழிகளில் மொழி பெயர்க்கும் திட்டமானது தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.