மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 , 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பாடங்களை படித்து வந்தனர். இந்நிலையில் சில மாநிலங்களில் 9 வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் மும்பையில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதேபோல் உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி அளித்தால் வருகிற 27ம் தேதியிலிருந்து 5 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மும்பையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு நடைபெறம் தேதியை பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடைபெறும் . 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து மே 29-ஆம் நடைபெறும்.
மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 22ம் வரைநடைபெறும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி ,மார்ச் மாதத்தில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் காலதாமதமாக நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.