தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வருகின்ற 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Categories
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
