நாடு முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டு முதல் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதுமட்டுமல்லாமல் கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடப்பு ஆண்டில் நடந்து முடிந்தது. அதன் பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளது.அதன்படி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி முடிவடைகிறது.அதனைப் போலவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி மார்க் 25ஆம் தேதி முடிவடைவதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.