Categories
உலக செய்திகள்

பால்டிக் கடலில் 1,00,000 டன் ரசாயன ஆயுதங்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சிகரமான தகவல்…!!!

கடலின் அடியில் உள்ள வாயு வெடிகுண்டுகள் சுமார் 70 மீட்டர் சுற்றளவு வரை நீரில் மாசை  ஏற்படுத்துவதோடு தாவரங்களையும் விலக்குகளையும் அழித்து விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெர்மன் நாட்டின் நாஜி படைகள் இரண்டாம் உலகப் போருக்கு பின் சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்களை கைவிட்டு சென்றன. அவை, பால்டிக் கடலின் அடிப்பகுதியில் புதைந்திருக்கின்றன. கடல் அரிப்பினால் அந்த ரசாயன ஆயுதங்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவை உண்டாக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது.

போலந்து நாட்டின் அறிவியல் அகாடமி மேற்கொண்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பால்டிக் கடற்பரப்பில் கிடக்கும் பீப்பாய்கள், குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதை கணக்கிடுவது மிகவும் சிரமம். எனினும் அவை 40,000-லிருந்து 1,00,000 டன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அவை, இயற்கை சூழலுக்கு கடும் பேரழிவை உண்டாக்கவிருக்கின்றன. இதில் கடலின் அடியில் உள்ள வாயு வெடிகுண்டுகள் சுமார் 70 மீட்டர் சுற்றளவு வரைக்கும் நீரில் மாசுவை ஏற்படுத்துவதுடன், தாவரங்களையும் விலங்குகளையும் கொன்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |