Categories
உலக செய்திகள்

10,000 உக்ரைன் வீரர்களுக்கு 120 தினங்களுக்கு…. பிரிட்டன் பிரதமர் அதிரடி அறிவிப்பு…..!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதனிடையில் 10,000 உக்ரைனிய வீரர்களுக்கு 120 தினங்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தினை பிரிட்டிஷ் பிரதமரான போரிஸ்ஜான்சன் முன்மொழிந்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆயுதஉதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று பிரிட்டன் பிரதமரான போரிஸ்ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு திடீரென்று பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ துருப்புக்களுக்கான பயிற்சித்திட்டத்தைத் தொடங்க இருப்பதாக முன் மொழிந்தார்.

ரஷ்யாவுடனான போர் துவங்கிய பிறகு, உக்ரைனுக்கு அவர் 2-வது முறையாக பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியை, பிரிட்டன் பிரதமரான போரிஸ்ஜான்சன் இன்று சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பில் உக்ரைன் போரின் நிலைமையை பற்றி இருவரும் விவாதித்தனர். இது தொடர்பாக போரிஸ்ஜான்சன் தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைனின் ராணுவத்திலுள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சியளிக்ககூடிய அடிப்படையில் பெரியளவிலான பயிற்சியை இங்கிலாந்து நாடானது வழங்கவுள்ளது என தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைனுடன் துணைநிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். இதன் கீழ் குறைந்தது 10,000 உக்ரைன் வீரர்கள் 120 தினங்களுக்கு பயிற்சி பெறுவார்கள் என ஜான்சன் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |