Categories
மாநில செய்திகள்

1000 தடுப்பணைகள் கட்டப்படும்….. அமைச்சர் துரை முருகன் உறுதி….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர்நிலைகளில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக 250 கோடி மதிப்பில் எட்டு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.அதிமுக ஆட்சியில் கதவணை கட்ட வாங்கிய கடனுக்கு, திமுக ஆட்சியில் வட்டி கட்டி  வருகிறோம் என்றும், அதிக வட்டிக்கு கடன் வாங்கியது அதிமுக அரசு என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |