புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் தெற்கு தெருவில் முகமது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபானா பஸ்லீம்(23) என்ற மகள் உள்ளார். இவருக்கு சதாம் உசேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த சிபானா பஸ்லீம் 1000-க்கும் மேற்பட்ட குடியரசு தினம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால் “விரிஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” என்ற அமைப்பின் புத்தகம் இளம்பெண்ணின் ஓவியங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.
Categories
1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள்….. சாதனை படைத்த இளம்பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!
