இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி புதுச்சேரியில் காவலர் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுவையில் எஸ்.ஐ, ஏ.எஸ்.ஐ, தலைமை காவலர் மற்றும் போலீசார் என 163 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், காவல் துறையில் ஏராளமான பதவிகளில் உள்ள 163 பேர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வருகிற ஜனவரி 20-ஆம் தேதிக்குள் 390 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்கள் காவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு நடத்திய பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி முடிக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 300 காவலர் பணித் தேர்வு மற்றும் 400 ஊர்க்காவல் படை வீரர் தேர்வு இந்த ஆண்டில் நடத்தப்படும். எனவே இந்த ஆண்டில் காவலர் பணியிடத்தில் 1000 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும் எஸ்ஐ பணியிடங்கள் காலியாக உள்ள 47 இடங்களை நேரடி தேர்வு மூலம் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு எஸ்ஐ பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.