Categories
மாநில செய்திகள்

1000ஐ தாண்டிய கொரோனா… தமிழக மக்கள் ஷாக்..!!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800க்கும் மேல் பதிவான பாதிப்பு இன்று ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி இன்று ஒரே நாளில் 1087 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 64 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 8,45,178 பேர் குணமடைந்துள்ளனர். இதே வேளையில் சென்னையில் பாதிப்பு இன்று மட்டும் 421 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 6,690 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த திடீர் உயர்வால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Categories

Tech |