Categories
உலக செய்திகள்

“அடடா! அருமை”… சாதித்த 100 தமிழ்ப்பெண்கள்…. கௌரவித்த கனடா அமைப்பு…!!!

கனடாவில், தங்கள் துறைகளில் சாதித்த 100 தமிழ் பெண்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றிருக்கிறது.

கனடாவின் கொழும்பு பகுதியில் கடந்த 21 ஆம் தேதி அன்று GLOBAL TOWERS LOUNGE HALL  என்ற மண்டபத்தில் தமிழ் பெண் ஆளுமைகளை சிறப்பிக்கும் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ராகவன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் இலங்கையில் பல மாகாணங்களில் வசிக்கும் பெண்களில் கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சமயப்பணி மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் பெண்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில், அன்னலட்சுமி இராஜதுரை என்ற பிரபல எழுத்தாளருக்கும் விருது கிடைத்தது.

இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்த கனடாவின், “விழித்தெழு பெண்ணே” அமைப்பின் தலைவியான திருமதி. சசிகலா நரேன் குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |