தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 மாணவிகள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகாரை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் தெரிவிக்கலாம் என துணை கமிஷனர் ஜெயலட்சுமி தனது செல்போன் (94447 72222) எண்ணை வெளியிட்டிருந்தார். இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 100 பேர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 22 மாணவிகள் புகார் செய்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த புகார்களுக்கு அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.