திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கான அனுமதி வாபஸானால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸாகும் என திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதேபோல் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது . 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கிய திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது .
நாளை இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றது . இந்நிலையில் 100% இருக்கை அனுமதி வாபஸ் பெறப்பட்டால் பொங்கல் திருநாளில் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளியிடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார் . ‘ஈஸ்வரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .