சண்டா மரியா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மதிப்பில் 7200 ரூபாய் வழங்கப்படும் என சுற்றுலாத் துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் அனைத்து துறைகளிலும் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இதில் சுற்றுலாத் துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து நாடுகளும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி கலிபோர்னியாவில் காண்போரை கண்கவரும் அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுலாத் தலமான சண்டா மரியா என்ற பள்ளத்தாக்கு இருக்கின்றது. இந்த சுற்றுலா தலம் கொரோனா பாதிப்பால் பெரும் வீழ்ச்சியை சந்தித்த காரணத்தால் அதனை மீட்கும் முயற்சியில் சுற்றுலா துறை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக சண்டா மரியா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 7200) இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த சலுகை ஆனது பிப்ரவரி 4 தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த சலுகையின் மூலமாக சாண்டா மரியா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுற்றுலா துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.