தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான் இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது.
ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே நிலம் ஒதுக்கீடு செய்து கையெழுத்து போட்டு இன்றைக்கு பச்சை பொய் பேசுகிறார். அதுமட்டுமல்ல அந்த விரிவாக்கத்திற்கு 1, 500 கோடி செலவிடப்படும் என்றும் சொன்னார்.
எல்லாத்தையும் அவர்கள் செய்து விட்டு, பலியை மட்டும் எங்கள் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஸ்டெர்லைட் இரண்டாம் விரிவாக்கம் இல்லை என்றால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது, இந்த பிரச்சினையே வந்திருக்காது. இந்த பிரச்சனை வருவதற்கு காரணம் நூற்றுக்கு நூறு சதவீதம் திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் என்பதுதான் தெளிவுபட குறிப்பிடுகின்றேன் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.