புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 36 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடியே 23 லட்சம் பயனாளர்கள் பயனடைகின்றனர்.
இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்த பணியாளர் கடந்த 15ம் தேதி முதல் கால வரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டடு வருவதால் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வரும் பணியாளர்களின் வருகை பதிவேடு சரிபார்ப்பு, அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளற்றது. அதே போல புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் நிறுத்தப்பட்டதாக ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்த பணியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளார்கள்.