Categories
உலக செய்திகள்

100 வருட பழமையான கல்லறை…. திடீரென வெளியே வந்த தலைமுடி…. திகில் வீடியோ வைரல்….!!!

கலிபோர்னியாவில் உள்ள Sacramento என்ற பகுதியில் 100 வருடங்கள் பழமையான ஒரு கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறை கடந்த 1906-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லறையை பார்ப்பதற்காக ஜோயல் மாரிசன் என்பவர் சென்றுள்ளார். அவர் கல்லறையை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென கல்லறையில் இருந்து ஒரு பெண்ணின் தலைமுடி வெளியே வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோயல் கல்லறையில் இருந்து வெளியே வந்த தலைமுடி யாருடையது என்பதை சோதித்து பார்ப்பதற்காக அதிலிருந்து சிறிது சாம்பிளை எடுத்து நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த கல்லறைக்கு அருகே இருக்கும் மரத்தின் வேர்கள் நீண்டு கல்லறையை பாதித்திருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு விலங்கு தலைமுடியை கல்லறையில் இருந்து வெளியே இழுத்து இருக்கலாம் என ஜோயல் கருதுகிறார்.

Categories

Tech |