Categories
மாநில செய்திகள்

100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற…. ஆதார் எண் இணைப்பு கட்டாயம்…. புதிய லிங்க் வந்துவிட்டது….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது. இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதில் சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் வாடகைதாரர்களிடம் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கின்றன. இது தவிர பல முறையிலும் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலர் விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இப்படி பல காரணங்களால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அ

தே சமயம் ரேஷன் கார்டுகளிலும் பல மோசடிகள் அரங்கேறுகின்றன. இதனை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுவதால் ஒரே நபர் வேறு முகவரியில் கார்டு வாங்க முடியாது. மற்ற கார்டுகளிலும் உறுப்பினராக சேர முடியாது. ரேஷன் அட்டையை தொடர்ந்து இலவச மின்சாரத்தில் முறைகேடு தடுக்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது மின் கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான https://www.tnebltd.gov.in/adharupload/என்ற லிங்கை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இது தற்காலிக சோதனை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக மின் இணைப்புகளை கொண்டவர்களை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |