அசாமில் பறவை காய்ச்சல் காரணமாக 100 க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது .
கனமழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக, அசாமில்பர்ஹாம்பூரில் நகரில் உள்ள சாந்தி வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. இதைக்கண்ட உள்ளூர்வாசிகள் நெருப்பு மூட்டி மீதமிருந்த பறவைகளை காப்பாற்றியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனசரக அதிகாரி மலாகர் பேசுகையில் , கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம். மேலும் அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லபடும். அவற்றை குணப்படுத்த முடிந்தவரை நாங்கள் சிறப்பாக செயலாற்றுவோம். மோசமான வானிலை சூழலால் மருத்துவர்கள் வரவில்லை. இந்தப் பறவைகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரழந்திருக்ககூடுமோ என்று அஞ்சப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.