Categories
மாநில செய்திகள்

100 கோடி தடுப்பூசி…. ஓரளவுக்கு மன நிறைவுதான்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி….!!!!

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது ஓரளவுக்கு மனநிறைவு தருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் இளவயது கர்ப்பம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, குண்டலபட்டி கிராமத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். இன்று முதல் இந்த மாவட்டத்திலுள்ள கிராமங்கள் முழுவதும் 1 மாத காலத்திற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, இந்தியா முழுவதும் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நாட்டின் மக்கள் தொகை 139 கோடி இதில் 100 கோடி என்பது 70 விழுக்காடு ஆகும். அதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டும் 197 கோடி மக்கள் இருக்கின்றனர்.

இவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த 194 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். தற்போது 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது மனநிறைவு கொள்கின்ற விஷயம்தான். இருந்தாலும் இது 50% தான் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முழு மனநிறைவு ஏற்படும் என்றும், தமிழகத்தில் தினசரி 2 கோடியே 72 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இப்போது வரையில் 5 கோடியே 40 லட்சத்து 8 ஆயிரத்து 27 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 68% பேர் 1 தடுப்பூசி போட்டுள்ளனர். 2 வது தடுப்பூசி 28% பேர் போட்டுக் கொண்டுள்ளனர். நாளை மறுநாள் 50,ஆயிரம் இடங்களில் 5 ஆம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் 50 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |