தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழக முழுவதும் பயணிக்க அரசு பேருந்துகளில் 75 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 சதவீதம் கட்டணத்தை மட்டும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்வை திறனாளிகள் தாங்கள் பேருந்தில் ஏறும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரம் வரை கட்டணம் என்று பயணிக்கலாம் என மாற்றுத்திறனாளி நலத்துறை அறிவித்துள்ளது.