Categories
தேசிய செய்திகள்

100க்கு 151 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் லலித் நாராயண் மிதிலா என்ற பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாடத் தேர்வு எழுதியுள்ளார். இதில் அவருக்கு 100க்கு 151 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிகாம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதித் தாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வாறு மாணவர்களுக்கு தவறான மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதன் பிறகு இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதையடுத்து,  அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலை நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்கலைகழகத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், மேற்கண்ட இரண்டு மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சு பிழைகள் இருந்தன. அவை கண்டுபிடித்த பிறகு சரியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன. இவைகள் வெறும் அச்சுபிழை மட்டுமே வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |