அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெற்ற பிள்ளையின் முன் அவரது தாயார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் போது 10 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது சிறுமியின் ஆசிரியருக்கு ஒரு ஆணும் பெண்ணும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபடுவது கேட்டது. இதைத்தொடர்ந்து தன் மாணவர்கள் அந்த பேச்சை கேட்க வேண்டாம் என அவர் சத்தத்தை மட்டும் துண்டித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி குண்டு வெடித்தவுடன், அந்த சிறுமி காதுகளை பொத்திக் கொண்டதை ஆசிரியரால் காணமுடிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வில்லியம் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மரிபெல் ரோசாடோ மொரலஸ் தன்னுடைய நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு இளம் உறவினர்களின் கண்முன்னே கொல்லப்பட்டதாக மார்ட்டின் கவுண்டி ஷெரீப் அலுவலகம் தெரிவித்துள்ளது இந்த வழக்கு தொடர்பாக கைதான வில்லியம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஷெரீப் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த நான்கு குழந்தைகளும் மாகாண குழந்தைகள் நல இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.