Categories
உலக செய்திகள்

காமன்வெல்த் போட்டியிலிருந்து மாயமான இலங்கை வீரர்கள்…. பிரிட்டனில் தங்க முயற்சியா?… வெளியான தகவல்…!!!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த இலங்கையை சேர்ந்த 10 வீரர்களும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இலங்கை அணியும் கலந்து கொண்டது. நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பிரிட்டன் நாட்டிலேயே தங்கும் முயற்சியாக பர்மிங்காம் நகரிலிருந்து மாயமாகியிருக்கிறார்கள் என்று நாட்டின் உயர் விளையாட்டு அதிகாரி கூறியிருக்கிறார்.

தடகள வீரர்கள் 9 பேர் மற்றும் மேலாளர் ஒருவர் ஆகிய 10 பேரும் விளையாட்டிற்கான நிகழ்வுகள் முடிந்த பின் மாயமாகியிருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டிலேயே பணி வாய்ப்பு பெற்றுவிட்டு  அங்கு தங்குவதற்காக அவர்கள் விரும்புகிறார்கள் என்ற சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |