செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்கட்டணத்தை உயர்த்துவது சம்மந்தமாக, ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறார்கள். நாம் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்பதற்கான முழு அதிகாரம் பெற்ற அமைப்பு. அதில் கருத்துக்கள் சொல்வது, மக்களுடைய கருத்துக்கள். அதுல செல்வதற்கான உரிமை இருக்கிறது, அவர்களுக்கு கேட்டாக வேண்டும். கேட்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக இருக்கும்.
நான் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் இல்லாத ஒன்றை ( பாஜாக ) இருப்பதாக உருவாக்கி காட்டுகிறீர்கள், ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறீர்கள். யாருக்கும் மக்கள் செல்வாக்கு இருக்கிறது ? யார் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் ? யார் மக்களுக்கான ஒரு இயக்கத்தை நடத்துகிறார்கள் ? ஆட்சி நடத்துகிறார்கள் ? என்பதற்கான முக்கியத்துவத்தை கொடுங்கள்.
இல்லாத ஒரு நபரை, மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவர்களை…. 410 சிலிண்டர் இப்போது 1120 ரூபாய்க்கு விற்கிறதே இது ஏற்புடையதா? 54 ரூபாய்க்கு விற்ற டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறதே இது ஏற்புடையதா? இது எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். திமுகவோடு களத்தில் இல்லாத ( பாஜக) ஒருவரை இருப்பது போல தயவு செஞ்சு இனிமேல் காட்டுவதற்கான முயற்சிகள் வேண்டாம்.
பத்து பேர், இருபது பேர், போஸ்டர் மேல போஸ்டர்கள் ஒட்டி, facebook இல் லைவ் போட்டால் அவர்கள் ( பாஜக) இருக்கிற மாதிரி காட்டிக் கொள்வதா ? என்று கேட்கிறேன். ஒரு 20 பேர், 50 பேர் வந்து பேனர் மேல போஸ்டர் ஓட்டினால் இருக்கிறது மாதிரி காட்டுவதா ? அதையும் நீங்கள் ஒரு செய்தியாக வெளியிடுகிறீர்கள், இது மாதிரி மறியல் செய்தார்கள் என்று.
யார் இருக்கிறார்கள் ? யார் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ? எவ்வளவு வாக்குகளை வாங்கி இருக்கிறார்கள் ? எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கி இருக்கிறார்கள் ? என்னென்ன நிலைகள் இருக்கிறது, அதை பார்த்து அதற்கான முக்கியத்துவம் கொடுத்தால் பரவாயில்லை. இங்கே என்ன சூழல் இருக்கிறது ? என்பதை கவனித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.