Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… கண்ணிவெடியில் சிக்கிய பேருந்து…. சோமாலியாவில் பயங்கரம்…!!!

சோமாலியா நாட்டில் கண்ணிவெடி குண்டில் பேருந்து மாட்டி 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியாவில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரத்திற்கு பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜுபாலேண்ட் என்ற மாகாணத்தில் அரச படையினருக்கும், அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு சண்டை  நடந்திருக்கிறது.

இந்நிலையில், அந்த பேருந்தானது கண்ணிவெடியில் மாட்டியது. இதனால், பதறிய பயணிகள் மரண ஓலமிட்டனர். இக்கொடூர சம்பவத்தில் 10 பயணிகள் பலியாகினர். மேலும் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |