அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கைத் திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதிர்ச்சியடைந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் 8 தற்காலிக சிறைச்சாலைகளை அமைத்தது உ.பி. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.