படகு கவிழ்ந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பத்து பேர் மாயமாகி உள்ளனர்
இந்தோனேசியாவில் கிரகடாவ் எரிமலையின் அருகிலிருக்கும் ரகட்ட தீவிலிருந்து 16 பேருடன் கே.எம் புஸ்பிட்ட ஜெயா என்ற படகு புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென படகு கவிழ்ந்துவிட்டது.
இதுகுறித்து தகவலறிந்து தேடல் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு ஆறு பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேரை மும்முரமாக தேடிவருகின்றனர் ஏராளமான படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் விரைவில் 10 பெரும் கண்டுபிடிக்க படுவார்கள் என தெரியவருகின்றது. பரந்த தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் இவ்வாறு அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.