பாகிஸ்தானில் இடி மின்னலுடன் பெய்த மழையில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்திருக்கிறது. இதில் ஒகாரா நகரில் இருக்கும் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டுள்ளனர்.
அதன் பின்பு காயமடைந்த மூவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ஒகாரா மாவட்டத்தில் ஹஜ்ரா ஷா முகீம் என்ற பகுதியில் நடந்து சென்ற நபர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது மட்டுமல்லாமல் டோபா தேக் சிங் என்ற மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.