பொதுவாக தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது பலருக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு தற்போது 5-வது முறையாக திருமணம் நடந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் சௌகாத் (67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 முறை திருமணம் ஆகியதில் 4 மனைவிகளும் இறந்து விட்டனர். இவருக்கு தற்போது 10 குழந்தைகள் மற்றும் 40 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதியவரின் மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆனதால் தங்களுடைய தந்தையை தனியாக விட்டு விடக் கூடாது என்பதற்காக 5-வது முறையாக 10 மகள்களும் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் மணப்பெண்ணிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு மிகப்பெரிய குடும்பத்தில் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு ஒரே குடும்பத்தில் வசிப்பவர்களுக்கு தினந்தோறும் 124 சப்பாத்திகள் போடப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.