Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10%ல் இருந்துச்சு…. இப்போ 3% ஆக குறைஞ்சுடுச்சு…. நாங்கள் விட போறதில்லை…. அமைச்சர் பேட்டி ..!

மதுரையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கியமானதா விளங்கும் மதுரையில் இதன் தாக்கம் கற்பனையிலும் எட்டாத வகையில் இருந்து. தமிழக அரசின் தொடர்ந்து சுகாதார நடவடிக்கையால் மதுரை தற்போது மீண்டு வருகின்றது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது இருந்த பாதிப்பை விட தற்போது குறைந்த அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், கொரோனா குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “மதுரை மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்பொழுது 10 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனாலும் தினந்தோறும் செய்யப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு குறையவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும்  இ- பாஸ் அனுமதி பெறாமல் கொடைக்கானல் பகுதிக்கு சென்ற நடிகர்கள் விமல், சூரி மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |