உலகம் முழுக்க சுமார் 10 கோடி மக்கள் கொரோனா தொற்றால் வறுமையில் வாடுவதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் வருடத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உலகவங்கி, கடந்த 2020-ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க சுமார் 10 கோடி மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. கடந்த 2020-ஆம் வருடத்தில், தெற்கு ஆசியாவில் மட்டும் 6.2 கோடி- 7.1 கோடி மக்கள், வறுமை நிலையில் உள்ளனர். இந்த வருடத்தில், அங்கு 4.8 கோடி-5.9 கோடி மக்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது.