Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 10 நகரங்களில் இன்று கொளுத்திய வெயில்…. சென்னையில் மட்டும் 107 ℉ வெப்பநிலை பதிவு!!

தமிழகத்தில் 10 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

வெயிலின்  தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழநாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல, வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் 105, கடலூரில் 104, பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, நாகை மற்றும் தூத்துக்குடியில் 102, திருச்சியில் 101, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே வெயில் தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக கோடை வெயில் தொடங்கினாலே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்.

ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் ஆரம்பித்ததில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை 35- லிருந்து 38 ஆக பதிவாகி வருகிறது. மேலும் மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான ஆம்பன் புயல் காரணமாக வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், ஆம்பன் புயல் தமிழகத்தை கடந்ததை தொடர்ந்து இன்று பல்வேறு நகரங்களில் வெப்பநிலை சதத்தை தாண்டியுள்ளது.

Categories

Tech |