ஆசியாவின் மிகப்பெரிய யானையான நடுங்கமுவா ராஜா மரணம் அடைந்தது. 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த இந்த யானை நடுங்கமுவா ராஜா என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் மிக வயதான யானையாக அறியப்பட்ட இந்த யானைக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த யானையின் உயரம் சுமார் 10.5 அடி. 69 வயதான இந்த யானை நேற்று இலங்கையின் கண்டி பகுதியில் இழந்தது. இதற்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Categories
10.5 அடி, 69 வயதான ஆசியாவின் மிகப்பெரிய யானை மரணம்…. இரங்கல்….!!!
