நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10.1% குழந்தைகள் மட்டுமே ஆன்லைன் கற்றல் மற்றும் கல்விக்காக ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதாக என்சிபிசிஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 59.2% குழந்தைகள் மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். 8 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30.2% குழந்தைகள் தனித்தனியாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். அவர்களில் 10 வயதுடையவர்களில் 37.8% பேருக்கு பேஸ்புக் கணக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.