Categories
தேசிய செய்திகள்

10 வருடம் நோயாளியாக இருந்த மனைவி…. அவரையும் கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா குட்டநாடு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் – லீலாம்மா தம்பதியினர். இவர் ஒரு விவசாயி. இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் 5 பேரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் லீலாம்மா உடல்நிலை பாதித்து சுமார் 10 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். மனைவியை ஜோசப் தான் பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தினால் மனைவியை சரிவர கவனிக்க முடியவில்லை.

அதனால் நேற்று வீட்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில், இறந்து கிடப்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வந்து பார்க்கும்போது, ஜோசப் மனைவி லீலாம்மா ஒரு அறையில் இறந்து கிடப்பதை காவல்துறையினர் கண்டனர். மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என ஜோசப் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து இருவரது உடலையும் காவல்துறையினர் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |