இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று ,முன்தினம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவரின் மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர் உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்று பெருமைக்குரியவர். 70 ஆண்டு கால ஆட்சியை நினைவு கூறும் வகையில் அவர் உபயோகித்த பொருள்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதாவது ராணி எலிசபெத்தின் மறைவையடுத்து அவர் சம்பந்தப்பட்ட பொருட்கள் என சோப்பு சீப்பு உள்ளிட்டவை ஈபே இணையதளத்தில் ஏலத்திற்கு வருகின்றன. இதில் சுவாரஸ்யமாக, 1998இல் விண்ட்சர் அரண்மனையில் ராணி பயன்படுத்தி, களவுப்போன டீபேக் இது, விலைமதிப்பில்லா இந்த டீபேக்கை வாங்கி வரலாற்றில் இடம்பிடிப்பீர்” என்ற விளம்பரம் வேறு. வெற்றிகரமாக ஏலம் போனது எவ்வளவுக்கு தெரியுமா, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு…. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.