ராணிப்பேட்டையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டினுடைய காவல்துறை சப் இன்ஸ்பெக்டரான சிதம்பரம் தலைமையிலான காவல்துறையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அத்தியாவசிய தேவையின்றி விதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.