நாட்டிலேயே முதல்முறையாக அதிவேகமான டெலிவரியை ஜோமட்டோ அறிமுகப்படுத்தியது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்தார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும் என்றும், உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10, உணவு டெலிவரி நேரமும் பத்து நிமிடம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என்று சென்னை காவல் துறையிடம் ஜோமோட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எந்த திட்டமாக இருந்தாலும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே செயல்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி அறிவிப்பு சர்ச்சையான நிலையில் அந்த நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல் துறை விளக்கம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.