ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு கரையில் விற்பனை செய்யும் மீன்களை வாங்கி சாப்பிடுவர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி அணையில் குளிப்பதற்கு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் நேற்று முதல் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
Categories
10 நாட்களுக்கு பிறகு…. அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!
