Categories
மாநில செய்திகள்

10 கோவில்களில் இன்று முதல்….. இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்….!!!!!!

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. வட பழனி, திருச்செந்தூர், பழனி, மருதமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட 10 கோவில்களில் பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை, பஞ்சாமிர்தம், லட்டு போன்ற இலவச பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார்.

திட்டத்தை துவக்கி வைத்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:கடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் வழிகாட்டுதலின்படி வடபழநி திருக்கோயிலில் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக இருந்த சுற்றுலா மற்றும் கலை பண்பாடு ,இந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன்,அறநிலையத்துறை கமிஷ்னர் குமரகுருபரன், மாவட்ட செயலர் வேலு, கருணாநிதி, அண்ணன் என்று அழைக்கப்படும் தக்கார் ஆதிமூலம், கூடுதல் ஆணையர் திருமகள், இத்திருக்கோயில் குடமுழக்கு சிறப்பாக நடைபெற உதவியாக இருந்த துணைஆணையர் ரேணுகா தேவி உள்ளிட்டோரை பாராட்டுகிறோம் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |