Categories
சினிமா தமிழ் சினிமா

“10 கதை ரெடியா இருக்கு” 50-வது படம் மட்டும் முடியட்டும்…. நடிகர் சிம்பு சொன்ன குட் நியூஸ்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் சினிமா பயணத்தில் வல்லவன் மற்றும் மன்மதன் திரைப்படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த 2 படங்களையும் சிம்பு தான் இயக்கி நடித்து இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வல்லவன் திரைப்படதிற்கு சிம்பு எந்த படங்களையும் இயக்கவில்லை. இது தொடர்பாக நடிகர் சிம்புவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, நான் 10 கதைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறேன். என்னுடைய 50-வது திரைப்படத்தில் நடித்த பிறகு படங்களை இயக்குவேன் என்றார். இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |