தமிழகத்தின் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்இன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் dge.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறை தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் ஜூன் 17ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.