10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விடுதி வார்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலியில் இருக்கும் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே விடுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வார்டனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமுறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடனடியாக இருந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.