பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதாவது இருந்தால் மாவட்ட உதவி இயக்குனர்கள் அவற்றைத் தொகுத்து ஆதாரங்களுடன் இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிறந்த தேதி மற்றும் பெயரில் திருத்தங்கள் இருந்தால் மாற்றுச் சான்றிதழில் சான்றொப்பமிட்ட நகலை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
பெற்றோரின் பெயரில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மூலமாக ஆளறி சான்றிதழ் அனுப்ப வேண்டும். இந்த விவகாரம் இது உரிய கவனம் செலுத்தி பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் செல்வகுமார் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.